தமிழக செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி டிரைவர் சாவு

ஆழமான பகுதிக்கு குமார் சென்றதால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார்.

பென்னாகரம்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஆவளப்பள்ளி தோட்டக்கரி பகுதியை சேர்ந்த பண்டரிநாதன் மகன் குமார் (வயது 35). டிரைவர். நேற்று குமார், தன்னுடைய நண்பர் குமரேசனுடன் சரக்கு வாகனத்தில் ஓசூரில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வந்துள்ளனர்.

பின்னர் ஊட்டமலை பரிசல்துறை காவிரி ஆற்றில் குளித்தனர். அப்போது ஆழமான பகுதிக்கு குமார் சென்றதால் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டார். அருகில் இருந்தவர்களால் குமாரை காப்பாற்ற முடியவில்லையாம்.

போலீஸ் விசாரணை

தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து ஆற்றில் மூழ்கிய குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.