ஆட்டோ 
தமிழக செய்திகள்

திருப்புவனம் அருகே அரசுப் பேருந்து - ஆட்டோ மோதி ஓட்டுநர் உயிரிழப்பு

போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசுப் பேருந்து மற்றும் ஆட்டோ நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ ஓட்டுநர் உயிரிழந்தார்.

அதிகாலையில் விபத்து

மதுரை - ராமநாதபுரம் 4 வழிச்சாலையில், திருப்புவனம் அருகே இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் ஆட்டோ ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த மோதலில் ஆட்டோவின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.

ஓட்டுநர் பலி

இந்த கோர விபத்தில் ஆட்டோவை ஓட்டி வந்த காமின் கனி (வயது 50) என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் நடவடிக்கை

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த திருப்புவனம் போலீசார், உயிரிழந்த காமின் கனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT