தமிழக செய்திகள்

பொதுமக்கள், பா.ம.க. தொண்டர்களை சந்திக்கும் டாக்டர் ராமதாஸ்: குறைகளை தெரிவிக்கலாம்

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் நாளை முதல் அனைத்து நாட்களும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸை பொதுமக்கள், கட்சியினர் சந்திக்கலாம்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் பொதுமக்கள் மற்றும் பா.ம.க. தொண்டர்களை சந்தித்து குறைகளை கேட்டறிய இருக்கிறார். இது தொடர்பாக, பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நாளை (சனிக்கிழமை) முதல் தினமும் தைலாபுரம் தோட்டத்தில் பொதுமக்களையும், கட்சித் தொண்டர்களையும் நேரில் சந்தித்து குறைகளைக் கேட்பதற்காக நேரம் ஒதுக்கியுள்ளார். அதன்படி, சனி, ஞாயிறு உள்பட வாரத்தின் அனைத்து நாட்களும் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை அவரை சந்திக்கலாம். அப்போது, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.