தமிழக செய்திகள்

போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

திண்டிவனத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

திண்டிவனம்:

திண்டிவனம் காந்தி சிலையில் இருந்து தாலுகா அலுவலகம் வரையில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் சப்-கலெக்டர் அலுவலக அலுவலர்கள், திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன், திண்டிவனம் கோட்ட கலால் அலுவலர் புஷ்பாவதி, இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, தேசிய மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மோகன்தாஸ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து கோஷமிட்டனர். 

SCROLL FOR NEXT