தமிழக செய்திகள்

நெல்லையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு யாத்திரை - நயினார் நாகேந்திரன் பங்கேற்பு

பா.ஜ.க. தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் போதை ஒழிப்பு விழிப்புணர்வு யாத்திரையை தொடங்கி நடத்தி வருகிறார்.

நெல்லையில்,

நெல்லையில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு யாத்திரையில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

“பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் உயரிய சிந்தனையான “போதை இல்லா பாரதம்” என்ற இலக்கை முன்னிறுத்தி, நம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலுர் இப்ராஹிம் முன்னெடுத்துள்ள போதை ஒழிப்பு விழிப்புணர்வு யாத்திரை, கன்னியாகுமரியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் திருநெல்வேலி வடக்கு மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு யாத்திரையில் பங்கேற்று, போதைப் பொருட்களின் தீமைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறேன். போதைப் பழக்கத்தில் இருந்து இளைய தலைமுறையை பாதுகாத்து, ஆரோக்கியமான மற்றும் வலிமையான சமூகத்தை உருவாக்குவதற்கான இத்தகைய விழிப்புணர்வுப் பணிகள் காலத்தின் தேவையாகும்.

இந்நிகழ்வில் திருநெல்வேலி வடக்கு மாவட்டத் தலைவர் முத்து பலவேசம் மற்றும் திருநெல்வேலி வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT