பெரம்பூர்,
கொடுங்கையூர், முத்தமிழ் நகர் 8வது பிளாக் பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் தங்களது கார், மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களை சாலையோரத்தில் நிறுத்தி இருந்தனர். நேற்று இரவு அப்பகுதிக்கு வந்த போதை வாலிபர்கள் ரகளையில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த கார், மோட்டார் சைக்கிள்,ஆட்டோக்களை அடித்து நொறுக்கினர்.
சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதும் போதை வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டினர். தொடர்ந்து அங்கிருந்த வாகனங்களை போதை கும்பல் அடித்து நொறுக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இந்த தாக்குதலில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு இருந்த 5 ஆட்டோக்கள், 8 கார்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் சேதம் அடைந்தன.
தகவல் அறிந்ததும் கொடுங்கையூர் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து வாகனங்களை சேதப்படுத்திய கும்பல் குறித்த விபரங்களை சேகரித்து வருகின்றார்கள். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.