சென்னை,
தமிழகத்தில் உள்ள 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், ரூ.5000 முன்கூட்டியே விடுவிக்கப்பட்டிருப்பது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறந்த வழி என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இதை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். நேரடி பணப் பரிமாற்றம் என்பது உலகளாவிய அடிப்படை வருமானம்(UBI) போன்றது. இந்த பணம் உள்ளூர் பகுதிகளிலும், அதைச் சுற்றியும் செலவிடப்படுகிறது. இது உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்த சிறந்த வழியாகும். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எனது வாழ்த்துகள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.