சென்னை,
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட மூன்றாவது நாளில் உயிர்த்தெழுத்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக உலகம் முழுவ தும் கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.
இதையொட்டி நிலையில் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட் டோர் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தவெக தலைவர் விஜய் ஈஸ்டர் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த நன்னாளை ஈஸ்டர் திருநாளாகக் கொண்டாடும் சகோதர சகோதரிகளுக்கு நல்வாழ்த்துகள். இத்திருநாளில் அனைவரிடமும் அன்பு, சமாதானம், கருணை, சகோதரத்துவம், மனிதநேயம் ஆகியவை வளர்ந்தோங்கி நிலைக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.