தமிழக செய்திகள்

தவெக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்க எடப்பாடி பழனிசாமி முயன்றார்; அருண்ராஜ் பரபரப்பு குற்றச்சாட்டு

எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க பல கோடி ரூபாயை தயாராக வைத்து இருந்தார் என்று அருண் ராஜ் குற்றம் சாட்டியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமைச்சர் அருண்ராஜ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. நிலைப்பாட்டில் குழப்பம் உள்ளது. அவர்கள் தலைக்கு மேல் சி.பி.ஐ. வழக்குகள் உள்ளன. தேர்தல் முடிந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அ.தி.மு.க.வை சேர்ந்த 25 எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

விலைக்கு வாங்க முயற்சி

ஆனால், 32-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி நீக்கி உள்ளார். இவர்களும் துரோகம் செய்தார்களா?. அ.தி.மு.க.வில் தற்போது ஒருங்கிணைப்பே இல்லை. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும், கள்ள கூட்டணி அமைத்து எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முற்பட்டனர்.

எடப்பாடி தொகுதி

எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க பல கோடி ரூபாயை தயாராக வைத்து இருந்தார். த.வெ.க. எம்.எல்.ஏ.க்களை யும் அவர் விலைக்கு வாங்க முயன்றார். துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி தான். எடப்பாடி தொகுதியில் ரூ.25 கோடி கொடுத்து த.வெ.க. வேட்பாளரை விலைக்கு வாங்கி உள்ளார். நமது வேட்பாளர் அங்கு நின்றி ருந்தால் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் வாங்கி இருக்க மாட்டார். இது தான் எடப்பாடி பழனிசாமியின் துரோக வரலாறு.இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT