தமிழக செய்திகள்

நடிகர் அஜித்திற்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

'தன் திரைத்துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச்சகோதரர் அஜித்குமாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்' என்று தெரிவித்திருக்கிறார்.

SCROLL FOR NEXT