தமிழக செய்திகள்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் வென்ற மாணவர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

தேர்ச்சி பெறத் தவறியவர்கள் படிப்பு தான் எவராலும் அசைக்க முடியாத உங்களுடைய சொத்து என்பதை உணர்ந்து, நன்கு படித்து மீண்டும் தேர்ச்சி அடைய வேண்டும்.

சென்னை,

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது:-

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் எதிர்காலப் பாதையை தீர்மானிக்கப் போகும் முடிவை சரியாக எடுத்து அடுத்தடுத்த நிலைகளிலும் வெற்றிகளைப் பெற்று சாதிக்க வாழ்த்துகிறேன்.

இத்தேர்வில் தேர்ச்சி பெறத் தவறியவர்கள் மனம் தளர வேண்டாம். படிப்பு தான் எவராலும் அசைக்க முடியாத உங்களுடைய சொத்து என்பதை உணர்ந்து, நன்கு படித்து மீண்டும் தேர்ச்சி அடைய உங்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT