சென்னை,
தமிழக சட்டசபைக்கு ஒரேகட்டமாக இன்று (வியாழக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.
காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் சிலுவம்பாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஜனநாயக கடமையாற்றினார். வாக்களித்துவிட்டு கை விரலில் வைக்கப்பட்ட மை-யை எடப்பாடி பழனிசாமி புன்னகையுடன் காண்பித்தார். அவருடன் அவரது மனைவி, மகன் சென்று தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.