தமிழக செய்திகள்

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அக்., 3-ந் தேதி எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த சுற்றுப்பயண அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக அந்தக் கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

மதுராந்தகம்

இது குறித்து அ.தி.மு.க. தலைமை அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 6.10.2026 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் கணிதா சம்பத் அவர்களை ஆதரித்து, 3.10.2026 அன்று கீழே குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் உள்ளவாறு சூறாவளி தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்கள்.

சுற்றுப் பயணத் திட்டத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், மதுராந்தகம் தொகுதியை சேர்ந்த தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள், சிறப்பான முறையில் செய்திடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

கழகப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த சுற்றுப்பயண அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT