தமிழக செய்திகள்

பழனி முருகன் கோவிலில் எடப்பாடி பழனிசாமி மனைவி சாமி தரிசனம்

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

பழனி,

உலக புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏரா ளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்டோரும் அவ்வப்போது வருகை தருகின்றனர். அந்த வகையில், முன்னாள் முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியின் மனைவி ராதா மற்றும் அவரது மகன் மிதுன் ஆகியோர் நேற்று மாலை பழனிக்கு வந்தனர்.

அவர்கள் அடிவாரத்தில் இருந்து ரோப் கார் மூலம் மலைக் கோவில் சென்றனர். அங்கு சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு, 2 பேரும் சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து போகர் சன்னதி, கைலாசநாதர் சன்னதியிலும் தரிசனம் செய்தனர். இதேபோல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், உடுமலை ராதாகிருஷ்ணன், பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோரும் நேற்று பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.