விஜய் 
தமிழக செய்திகள்

கல்வி விருது விழா: 26, 27-ந்தேதிகளில் சென்னையில் நடத்த த.வெ.க. திட்டம்

2-வது கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி 26 மற்றும் 27-ந்சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

சென்னை,

த.வெ.க. சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 10, 12-ம் வகுப்பு தேர்வில் மாவட்டம் மற்றும் சட்டசபை தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு கல்வி விருது, உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் கட்ட விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 4-ந்தேதி சென்னையில் நடந்தது.

இதில் முதல்-அமைச்சர் விஜய் பங்கேற்று மாணவர்களுக்கு உதவி தொகைகளை வழங்கினார். தற்போது 2-வது கட்டமாக விருது வழங்கும் நிகழ்ச்சி 26 மற்றும் 27-ந்சென்னை நீலாங்கரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பகல் 2.30 மணிக்கு நடக்கிறது.

26-ந்தேதி நடக்கும் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில், கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும், 27-ந்தேதி சேலம், நாமக்கல், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் பங்கேற்கிறார்கள்.

விழாவுக்கு வரும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு பிரத்யேக நுழைவு சீட்டு வழங்கப்படுகிறது. இதற்கான பொறுப்பு மாவட்ட செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT