தமிழக செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையர் உருவபொம்மை எரிப்பு: கம்யூனிஸ்டு கட்சியினர் 20 பேர் கைது

திருச்சியில் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி,

திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள தெப்பக்குளம் தபால் நிலையம் அருகே கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டதையும்,

கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்களை போலீசாரும், துணை ராணுவப் படையினரும் முற்றுகையிட் டதை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். அப்போது திடீரென ஒரு பிரிவினர் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் உருவ பொம்மையையும், பிரதமர் மோடி, அமித்ஷா, ஞானேஷ்குமார் ஆகியோரின் படங்களையும் எரித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த கோட்டை போலீசார், கட்சி நிர்வாகிகள் ஸ்ரீதர், வெற்றிச் செல்வன், சிவா உள்ளிட்ட 20 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

SCROLL FOR NEXT