தமிழக செய்திகள்

முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோ ரூ.62-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.67 ஆக அதிகரித்து உள்ளது.

முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ.92 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT