தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை சரிவு: இன்றைய நிலவரம்

8 நாட்களுக்குப் பிறகு விலை குறைந்துள்ளதால் நுகர்வோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் சரிந்து ரூ.6.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 16ஆம் தேதி முதல் ரூ.6.80-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், 8 நாட்களுக்கு பிறகு சற்று குறைந்துள்ளது. சென்னையில் ஒரு முட்டை ரூ.7.30 வரை விற்கப்படுகிறது.

சத்துணவு முட்டை வினியோகம், முட்டை நுகர்வு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை விலை கடுமையாக உயர்ந்து வந்தது. தற்போது சற்று குறைந்துள்ளதால், நுகர்வோர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.