நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 560 காசுகளாக இருந்து வந்தது இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 20 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். இதன் மூலம் முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக சரிந்து உள்ளது.
புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, அசைவம் உட்கொள்வோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதால் பண்ணைகளில் முட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக முட்டை விலை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 13 நாட்களாக முட்டை விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று சரிவை சந்தித்துள்ளது.