நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கோழி முட்டை கொள்முதல் விலை 600 காசுகளாக (ரூ.6) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 30 காசுகள் குறைக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 570 காசுகளாக (ரூ.5.70) குறைந்துள்ளது. ஆடி மாதம் காரணமாக முட்டையின் நுகர்வு குறைந்துள்ளதாக விலை குறைந்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர். நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த ஒரு வாரத்தில் ரூ.1.10 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.