தமிழக செய்திகள்

நாமக்கல்லில் முட்டை விலை 10 காசுகள் உயர்வு

புதிய விலை நாளை காலை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 540 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். இதன் மூலம் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக உயர்ந்து உள்ளது. புதிய விலை நாளை காலை முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT