நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
முட்டை கொள்முதல் விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுதான் நிர்ணயம் செய்கிறது. இந்த நிலையில், இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இதன் காரணமாக, நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் கொள்முதல் விலை ரூ.5.60 ஆக இருந்த நிலையில் இன்று ஒரே நாளில் 10 காசுகள் உயர்ந்து ரூ.5.70 ஆக முட்டை விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் ஒரு முட்டையின் விலை ரூ.6.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.