தமிழக செய்திகள்

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் கடந்த சில நாட்களாக முட்டை விலை அதிகரித்து வருகிறது.

நாமக்கல்,

நாமக்கல் மண்டலத்தில் 525 காசுகளுக்கு கோழிப்பண்ணைகளில் முட்டை கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. அதனால் நாமக்கல் மண்டல கோழிப்பண்ணைகளில் இன்று (திங்கட்கிழமை) 530 காசுகளுக்கு முட்டை கொள்முதல் செய்யப்பட உள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.102-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. பின்னர் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையில் ரூ.3 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன் காரணமாக கறிக்கோழி ஒரு கிலோவின் விலை ரூ.105 ஆக ஆனது.மேலும் முட்டைக்கோழி கிலோ ரூ.97-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலையில் மாற்றம் ஏதுமில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT