தமிழக செய்திகள்

முட்டை விலை மீண்டும் உயர்வு

சென்னையில் முட்டை விலை ரூ.7.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 4 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ 3 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

5 காசுகள் உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 675 காசுகளாக (ரூ.6.75) இருந்து வந்தது. இதற்கிடையே இன்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட்டத்தில் அதன் விலையை மேலும் 5 காசுகள் உயர்த்த நிர்வாகிகள் முடிவு செய்தனர். எனவே இன்று முட்டை கொள்முதல் விலை 680 காசுகளாக (ரூ.6.80) அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதன் மூலம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. சென்னையில் முட்டை விலை ரூ.7.45 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலப்பொருட்களின் விலை உயர்வு

விற்பனை அதிகரிப்பு, கோழித்தீவன மூலப்பொருட்களின் கடுமையான விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் விலையேற்றம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பெரும்பாலான கடைகளில் சில்லறை விற்பனையில் தற்போது ரூ.8 என்றிருக்கும் நிலையில், மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.