நெல்லை,
நெல்லையில் கத்தரிக்காய் விலை கிலோவுக்கு ரூ.30 'கிடுகிடுவென' உயர்ந்து ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நெல்லை மாவட்டத்துக்கு காய்கறிகளின் வரத்து குறைவால் கடந்த சில வாரங்களாக தக்காளி, கேரட் உள்ளிட்டவற்றின் விலைகள் உயர்ந்தன. ஆந்திரத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை சற்று குறைந்துள்ள நிலையில், கத்தரிக்காய் வரத்து மிகவும் குறைந்து அதன் விலை மிகவும் அதிகரித்துள்ளது.
கடந்த 29-ம் தேதி ஒரு கிலோ கத்தரிக்காய் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. படிப்படியாக விலை உயர்ந்து நேற்று முன்தினம் ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று உழவர் சந்தையில் வெள்ளை கத்தரிக்காய் கிலோ ரூ.96-க்கும், மார்க்கெட் கடைகள் மற்றும் சில்லரை விற்பனை கடைகளில் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கத்தரிக்காய் விலை உயர்வால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.