தமிழக செய்திகள்

எழும்பூர் - திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் மாற்றம்

திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, புதுச்சேரியில் இருந்து வருகிற 12-ந் தேதி மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16861) பகுதிநேரமாக புதுச்சேரி-கடலூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் புதுச்சேரிக்கு பதிலாக கடலூர் போர்டில் இருந்து மதியம் 2.54 மணிக்கு புறப்படும்.

சோழன் எக்ஸ்பிரஸ்

அதே போல, திருச்சியில் இருந்து வருகிற 12, 13, 14 ஆகிய தேதிகளில் மதியம் 12.10 மணிக்கு புறப்பட்டு எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22676) 30 நிமிடம் தாமதமாக திருச்சியில் இருந்து புறப்படும். அதே போல, எழும்பூரில் இருந்து வருகிற 23, 24 ஆகிய தேதிகளில் காலை 8 மணிக்கு திருச்சிக்கு செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22675) 40 நிமிடம் தாமதமாக எழும்பூரில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.