வெள்ளியணை அருகே உள்ள முஷ்டகிணத்துப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 72). இவருக்கு நீண்ட நாட்களாக கால் மற்றும் இடுப்பு வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வலி குறையவில்லை. இதனால் மன வேதனை அடைந்த கந்தசாமி நேற்று முன்தினம் மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து அவரை உறவினர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கந்தசாமி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.