தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகே உள்ள தேமான்குளம் தெற்கு தெருவைச் சேர்ந்த வேலு மகன் ஆறுமுகம் (வயது 68). இவர் கடந்த 31-ம் தேதி காலை வயல் வேலைக்கு செல்வதற்காக நாசரேத்- ஆழ்வார்திருநகரி இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றுள்ளார்.
அப்பேது திருச்செந்தூரில் இருந்து திருநெல்வேலி நேக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் அவர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை ரெயில்வே நிலைய இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.