தமிழக செய்திகள்

சாலையில் பைக் நிலைதடுமாறி விழுந்த விபத்தில் முதியவர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவர், குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் அருகே சாலையில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்த விபத்தில் முதியவர் உயிரிழந்தார்.

தோட்டம் பராமரிப்பு பணி

தூத்துக்குடி மாவட்டம், சொக்கன்குடியிருப்பு மெயின் ரோட்டைச் சேர்ந்த அருளானந்தம் மகன் ஜேசுமரியான் (வயது 65). இவருக்கு மனைவியும் 3 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 5 ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் சின்னராணியபுரத்தை சேர்ந்த செல்வி என்பவர் வீட்டில் தங்கியிருந்து நடுவக்குறிச்சியில் உள்ள தோட்டத்தை பராமரித்து வந்துள்ளார்.

பைக் நிலைதடுமாறி விழுந்து விபத்து

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மழை பெய்ததால் தோட்டத்தில் உள்ள மாடு நனையாமல் இருப்பதற்காக வீட்டிலிருந்து தார்ப்பாய் எடுத்துக்கொண்டு தனது பைக்கில் சென்றுள்ளார். தட்டார்மங்கலம் பழைய டாஸ்மாக் கடை எதிரே வந்த போது சாலையில் பைக் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

முதியவர் உயிரிழப்பு

இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்தபோது, அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தட்டார்மடம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT