தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் ஆத்திகுளம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகையா மகன் நரசிம்மன் (வயது 65). இவர் தனது பைக்கில் கயத்தாறு- கடம்பூர் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்த குழியால் நிலைதடுமாறி திடீரென வலதுபுறம் திரும்பியுள்ளார். அப்போது பின்னால் லோடுடன் வந்த டிப்பர் லாரி இவரது பைக்கின் மீது மோதியது.
இந்தக் கோர விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த நரசிம்மன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து அங்கே வந்த கயத்தாறு போலீசார், அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரி ஓட்டுநர், சூரியமினிக்கன் பகுதியைச் சேர்ந்த நாகராஜன்(54) என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் ஓட்டிவந்த டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.