தமிழக செய்திகள்

யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை முதல்-அமைச்சரின் நிதிக்கு வழங்கிய முதியவர்

யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, நாமக்கல் கலெக்டரிடம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக முதியவர் வழங்கினார்.

நாமக்கல்,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பூல்பாண்டியன் (75 வயது). இவர் யாசகம் எடுத்து அரசு பள்ளிகளுக்கும், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கும் பணத்தை வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வருகை தந்த பூல்பாண்டியன், தான் யாசகம் பெற்ற ரூ.10 ஆயிரத்தை, நாமக்கல் கலெக்டர் மதுபாலனிடம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக வழங்கினார்.

தொடர்ந்து முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, ரூ.10 ஆயிரம் வழங்கிய முதியவர் பூல்பாண்டியனுக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், பணம் பெற்றதற்கான ஒப்புகை சான்றிதழை வழங்கினார்.