தமிழக செய்திகள்

முதியவர் தற்கொலை

முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்தார்.

நெல்லை பாளையங்கோட்டை அருகே வி.எம்.சத்திரம் ராமர் கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி (வயது 67). பெயிண்டர். இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மனமுடைந்த கணபதி சம்பவத்தன்று வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT