ஈரோடு,
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே, வீட்டில் தனியாக இருந்த 85 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் மாவட்டத்தையே உலுக்கியுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ளது கரும்பாறை கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்து வீட்டில் 85 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வந்தார். இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனியாக வீட்டில் வசித்து வந்த மூதாட்டி நேற்று இரவு வழக்கம் போல் தூங்கி கொண்டிருந்தார். அப்போது இரவில் மூதாட்டி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென மூதாட்டி வாயை பொத்தி மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
மறுநாள் காலை மூதாட்டியின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அதிர்ச்சியில் உறைந்தனர். மூதாட்டி ஆடைகள் கலைந்த நிலையில், ரத்த வெள்ளத்தில் படுக்கையில் கிடந்து துடித்துள்ளார்.அவரை மீட்டு உடனடியாக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு தலைமைமருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இது குறித்து அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமரா காட்சி காட்சிகளை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் விசா ரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.