தமிழக செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

ஒவ்வொரு மாவட்டமும் தனித்துவமான விழிப்புணர்வு செய்திகளை திறம்பட பரப்பி வருகின்றன.

சென்னை,

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் ஒரு பகுதியாக, வாக்காளர் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு (ஸ்வீப்) திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வாக்காளர்களின் விழிப்புணர்வை அதிகரிப்பது, தகவல் அறிந்த மற்றும் தார்மீக அடிப்படையிலான வாக்களிப்பை ஊக்குவிப்பது மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடையே முழுமையான தேர்தல் பங்கேற்பை உறுதி செய்வதையும் இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள், சட்டமன்ற தொகுதிகள் அளவில் இந்த முன்னெடுப்புகளைத் தீவிரமாக செயல்ப டுத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் பல்வேறு விழிப்பு ணர்வு நடவடிக்கைகள் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகின்றன. ஸ்வீப் திட்டத்தின் கீழ் பெரிய அளவிலான 1,486 நிகழ்ச்சிகளும், 22,130 சிறிய அளவிலான நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பெரிய அளவிலான நிகழ்ச்சிகளாக, மாரத்தான் போட்டிகள், மனிதச் சங்கிலிகள், வாக்காளர் உறு திமொழிப் பிரசாரங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள தேர்தல் எழுத்தறிவு சங்கங்களின் செயல்பாடுகள் ஆகியவை அடங்கும். ஒவ்வொரு மாவட்டமும் தனித்துவமான சின்னங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு செய்திகளைத் திறம்பட பரப்பி வருகின்றன.

அதில், வாக்களிப்பதன் முக்கியத்துவம், நேர்மையான வாக்களிப்பு ஆகியவை முக்கி யப்படுத்தப்படுகின்றன. மேலும், முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், நலிந்த பிரிவினர் ஆகியோரை மையப்படுத்தி விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.