தமிழக செய்திகள்

தேர்தல் களம் சூடுபிடிப்பு: நாகர்கோவிலில் இன்று பிரதமர் மோடியின் பிரம்மாண்ட வாகன பேரணி

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழக மக்கள் அனைவரது சார்பாகவும் அன்புடன் வரவேற்கிறேன் என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி,

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ஐ முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்ட தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று நாகர்கோவிலில் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்துகிறார்.

திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி இன்று மாலை 4 மணிக்கு -நாகர்கோவில் வருகை தருகிறார். பிறகு மாலை 5 மணிக்கு வேப்பமூடு பகுதியில் இருந்து வடசேரி சாலை வரை பிரதமர் மோடி சாலை வலம் மேற்கொள்கிறார்.

மத்திய இணை மந்திரி எல்.முருகன் எக்ஸ் பதிவு

தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த நமது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தேர்தல் பிரச்சாரம் மற்றும் மாபெரும் வாகன பேரணியில் கலந்து கொள்ள வருகை தரும் மக்கள் சேவகர் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை, தமிழக மக்கள் அனைவரது சார்பாகவும் அன்புடன் வரவேற்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.