நாகர்கோவில்,
தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதனைதொடர்ந்து குமரி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் 8 மணிநேர சுழற்சி அடிப்படையில் 18 பறக்கும் படைகளும், 18 நிலையான கண்காணிப்பு படைகளும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை தடுக்கவும், விதிமீறல்களில் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை கைப்பற்றப்படும் பணியிலும் இந்த படையினர் செயல்பட்டு வருகின்றனர்.
பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு படை குழுவினர்களால் நேற்று காலை 6 மணி வரையிலான 24 மணிநேரத்தில் விளவங்கோடு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.64 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுவரை கன்னியாகுமரி தொகுதியில் ரூ.4 லட்சத்து 66 ஆயிரத்து 700-ம், நாகர்கோவில் தொகுதியில் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 340-ம், குளச்சல் தொகுதியில் ரூ.14 லட்சத்து 42 ஆயிரத்து 50-ம், பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.3 லட்சத்து 33 ஆயிரத்து 500-ம், விளவங்கோடு தொகுதியில் ரூ. 16 லட்சத்து 80 ஆயிரத்து 700-ம், கிள்ளியூர் தொகுதியில் ரூ.7 லட்சத்து 80 ஆயிரத்து 790-ம் என மொத்தம் ரூ.53 லட்சத்து 57 ஆயிரத்து 80 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டர் அழகு மீனா தெரிவித்துள்ளார்.