சென்னை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி நடந்து முடிந்தது. 234 தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக் கப்பட்டு உள்ளன.
தமிழகத்தில் அடுத்து யார்? ஆட்சி அமைக்கப்போகிறார்கள் என்பதில் அரசியல் கட்சியினர் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த ஆவலை பூர்த்தி செய்யக்கூடிய தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கையுடன் தொடங்கும், அதைத்தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் சுற்று வாரியான முடிவு கள். சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும். இந்த முடிவுகள் 'இ.சி.ஐ. நெட்' செயலியி லும் பிரதிபலிக்கும். மேலும், முடிவுகளை results.cci.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.
வாக்கு எண்ணும் பணிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத் தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண்பார்வையாளர்கள் துணையாக இருப்பார்கள் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் நாளை வாக்குகள் எண்ணப்படும் நிலையில் 234 தொகுதிகளுக்குமான தேர்தல் பார்வையாளர்கள் உடன் காணொலி வாயிலாக டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள், முடிவுகளை அறிவிப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இந்த ஆலோசனையில் பங்கேற்றார்.