தமிழக செய்திகள்

இதுவரை ரூ.189 கோடி பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை - அர்ச்சனா பட்நாயக் தகவல்

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உரிய ஆவணங்களை சமர்பித்து, திரும்ப பெற்றுக் கொள்ள குறை தீர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சென்னை,

தமிழக தலைமைத் தேர்தல் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் – 2026

1. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முன்னிலையில் , தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் இன்று மின்னணு காலச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த மின்னணு காலச் சீட்டுகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்காக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு நேரத்தைப் பெற வழி வகை செய்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் ஆணையம் வெளியிட்டுள்ள நடைமுறை அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு முறையாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

2. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள் , 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 26.03.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

வ.எண்வகைதொகை (கோடிகளில்)
1ரொக்கம்41.98
2மதுபானம்0.88
3போதைப்பொருட்கள்7.24
4விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி)115.1
5இதர பொருட்கள்/இலவசங்கள்24.53
மொத்தம்189.74

3. மாநிலம் முழுவதும் 2169 பறக்கும் படைகள் மற்றும் 2166 நிலை கண்காணிப்புக் குழுக்கள் பணம் , மதுபானம் மற்றும் இதர கவர்ச்சி பொருட்கள் விதிமுறைகளை மீறி வழங்கி வாக்குகளைக் கவருவதை தடுக்கும் பொருட்டு பணியாற்றி வருகின்றன. பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்களை உரிய ஆவணங்களை சமர்பித்து, திரும்ப பெற்றுக் கொள்ள மாவட்டந்தோறும் குறை தீர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பறிமுதல்கள் தொடர்பான குறைகளுக்கு இக்குழுக்களை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு கோரப்படுகிறது.. மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு.

மாவட்டத்தின் பெயர் - தொலைபேசி எண்கள்

1. திருவள்ளூர் 7373704202

2. சென்னை 9551055182

3. காஞ்சிபுரம் 9442745251

4. வேலூர் 7373704205

5. கிருஷ்ணகிரி 9500014446

6. தர்மபுரி 7373704209

7. திருவண்ணாமலை 7373704206

8. விழுப்புரம் 7402606327

9. சேலம் 9444094335

10. நாமக்கல் 7373704208

11. ஈரோடு 9442149101

12. நீலகிரி 7373704231

13. கோயம்புத்துதூர் 7373704213

14. திண்டுக்கல் 7373704224

15. கரூர் 7373704218

16. திருச்சிராப்பள்ளி 7373704217

17. பெரம்பலூர் 7373704220

18. கடலூர் 7373704203

19. நாகப்பட்டினம் 7373704215

20. திருவாரூர் 9444094386

21. தஞ்சாவூர் 7373704214

22. புதுக்கோட்டை 7373704221

23. சிவகங்கை 7373704227

24. மதுரை 7373704222

25. தேனி 7373704223

26. விருதுநகர் 7373704226

27. ராமநாதபுரம் 7373704225

28. தூத்துக்குடி 7373704229

29. திருநெல்வேலி 7373404228

30. கன்னியாகுமரி 9445000930

31. அரியலூர் 7373704219

32. திருப்பூர் 7373704212

33. கள்ளக்குறிச்சி 9003328441

34. தென்காசி 7305089505

35. செங்கல்பட்டு 7305089502

36. திருப்பத்தூர் 7305089501

37. ராணிப்பேட்டை 7305089500

38. மயிலாடுதுறை 9176001546

“தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.