தமிழக செய்திகள்

சென்னையில் மின்சார ரெயில் தடம் புரண்டு விபத்து

தாம்பரம்-கடற்கரை இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரெயில், சென்னை கோட்டை ரெயில் நிலையத்திற்குள் செல்லும்போது ரெயிலின் 5-வது பெட்டியின் சக்கரம் தண்டவாளத்தைவிட்டு விலகி தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட, ரெயில் என்ஜின் லோகோ பைலட் ரெயிலை நிறுத்திவிட்டு, இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். மீட்பு ஊழியர்களுடன் விரைந்து வந்த ரெயில்வே ஊழியர்கள் ரெயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் தூக்கி நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விபத்தை தொடர்ந்து தாம்பரம்-கடற்கரை இடையே ரெயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் அனைத்து ரெயில்களும் பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என ரெயில்வே அறிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT