தமிழக செய்திகள்

சென்டிரல்-திருவள்ளூர் இடையே மின்சார ரெயில் பகுதிநேரமாக ரத்து

சென்னை சென்டிரலில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 10.55 மணிக்கு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பயணிகள் மற்றும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 10.55 மணிக்கு அரக்கோணம் செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், சென்டிரலில் இருந்து இரவு 11.15 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருநின்றவூர்-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரலில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30, 5 மணிக்கு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருநின்றவூர்-திருவள்ளூர் இடையே ரத்துசெய்யப்படுகிறது. அதே தேதியில், திருவள்ளூரில் இருந்து அதிகாலை 3.50, 5.55 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருநின்றவூர் இடையே ரத்துசெய்யப்படுகிறது.

திருவள்ளூரில் இருந்து அதிகாலை 5.20 மணிக்கு பொன்னேரி வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருநின்றவூர் இடையே ரத்துசெய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.