தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடை 10 மற்றும் 11-ல் மேற்கூரை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடை பெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.15, இரவு 11, 11.20, 11.40, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில், தாம்பரத்தில் இருந்து இரவு 10.20, 11, 11.40 மணிக்கு சென்னை கடற்கரை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
செங்கல்பட்டில் இருந்து இரவு 10.20, 11 மணிக்கு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரம்-சென்னை கடற் கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, சென்னை கடற்கரையில் இருந்து அதிகாலை 3.55 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு வரும் ரெயிலும் சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படு கிறது. திருமால்பூரில் இருந்து இரவு 8 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் ரெயில் தாம்பரம்-சென்னை கடற் கரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை கடற்கரையில் இருந்து இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 11.05, 11.30, 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து இன்று மற்றும் வருகிற 6, 7, 8 ஆகிய தேதிகளில் அதிகாலை 3.50, 4.15 மணிக்கு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் பகுதிநேரமாக சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
கூடுவாஞ்சேரியில் இருந்து சென்னை கடற்கரைக்கு இன்று மற்றும் வருகிற 6, 7 ஆகிய தேதிகளில் இரவு 9.45, 10.10, 11.15 மணிக்கு வரும் மின்சார ரெயில் பகுதிநேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில், இரவு 9.20, 11 மணிக்கு செங்கல்பட்டில்இருந்து சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில்பகுதி நேரமாக தாம்பரம்-சென்னை கடற்கரை இடையே ரத்து செய்யப்படுகிறது' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.