சென்னை,
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-தாம் பரம் இடையே மின்சார ரெயில் வழித்தடத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 12-ந் தேதி ஆகிய நாட்களில் ரெயில் தண் டவாளம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்க்கமும் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 வரை மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகம், 5-ந் தேதி (இன்று) மற்றும் 12-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில், பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக சென்னை கடற்கரை ரெயில் நிலையம்-தாம்பரம் வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதலாக 50 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் முக்கிய பஸ் நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இந்த பஸ்கள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.