சென்னை,
மின்சார பற்றாக்குறையைப் போக்க, 10 ஆண்டுகள் என்ற நீண்டகால ஒப்பந்தத்தில் மின்சாரம் கொள்முதல் செய்ய தமிழக மின்சார வாரியம் முடிவுசெய்துள்ளது.
2027-ஆம் ஆண்டு முதல் 2037-ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட உள்ளதாகக் கூறப்படும் இந்த ஒப்பந்தம் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் 10 ரூபாய்க்குக் குறைவாக 5 முதல் 6 ரூபாய் வரை கிடைக்கும் எனவும், குறுகிய கால கொள்முதல் ஒப்பந்தத்தில் விலை அதிகமாக இருப்பதால், நீண்டகால ஒப்பந்தம் செய்துகொள்ள மின்சார வாரியம் முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்குமுன், 2013-ஆம் ஆண்டு நீண்டகால ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நீண்டகால மின்சாரம் கொள்முதல் செய்யப்பட உள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். நீண்டகால மின்சாரம் கொள்முதலுக்கு ஆலோசனை வழங்க ஆலோசகர் நிறுவனத்தை தேர்வு செய்யவும் மின்சார வாரியம் டெண்டர் கோரியுள்ளது.