தமிழக செய்திகள்

நுகர்வோர் செலுத்தும் மின் கட்டணம் கையாடல்... மின்வாரிய அலுவலக கணக்கீட்டாளர் சஸ்பெண்ட்

மின்கட்டணம் கட்டவில்லை என 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் தொடர்பு துண்டிக்கப்பட்டது.

செங்கல்பட்டு,

நுகர்வோர் செலுத்தும் மின் கட்டணம் கையாடல் செய்த மின்வாரிய அலுவலக கணக்கீட்டாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் சுற்றுவட்டார பகுதியில் மின்கட்டணம் செலுத்தவில்லை என 8-க்கும் மேற்பட்ட வீடுகளில் மின் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில் மின் தொடர்பு துண்டிக்கப்பட்ட வீடுகளில் இருந்து நுகர்வோர்கள், மின் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதுடன் செம்பாக்கத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். பின்னர், அங்கிருந்த மின்வாரிய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், இது குறித்து மின் அலுவலகத்தில் இருந்தவர்கள் உயர் அதிகாரிகளிடம் தகவல் அளித்தனர். உயர் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், செம்பாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் கணக்கீட்டாளராக பணியாற்றும் அருண்குமார் என்பவர், வயதான நுகர்வோர் ரொக்கமாக செலுத்தும் கட்டணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது. பின்னர், உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி அலுவலக கணக்கீட்டாளரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT