தமிழக செய்திகள்

மின்சார வாரிய ஆன்லைன் சேவைகள் நாளை இயங்காது - அதிகாரிகள் தகவல்

சர்வர்களை நவீனமயமாக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், மின்சார நுகர்வோர்களுக்கு விரைவான சேவைகளை வழங்குவதற்காக தனது கணினி தரவு சர்வர்களை படிப்படியாக நவீனமயமாக்கும் மற்றும் மேம்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, தாழ்வழுத்த மின் நுகர்வோர்களுக்கான இணையதள மின்சார கட்டணச் சேவைகள் மற்றும் தொடர்புடைய ஆன்லைன் சேவைகள் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணி வரை தற்காலிகமாக தமிழ்நாடு முழுவதும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மின் நுகர்வோர்கள் தங்களது இணையதள கட்டணப் பரிவர்த்தனைகள் மற்றும் தொடர்புடைய சேவைகளை மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக அல்லது அதற்குப் பின்னர் திட்டமிட்டு பயன்படுத்தி கொள்ள வேண்டும். தற்காலிக இடையூறால் ஏற்படும் சிரமங்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வருத்தம் தெரிவிக்கிறது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.