தமிழக செய்திகள்

மின்வாரிய இணையதள சேவைகள் இன்று இயங்காது- தமிழ்நாடு மின்சார வாரியம் தகவல்

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், உயரழுத்த மின்நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள அமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது பயன்பாட்டில் உள்ள உயரழுத்த பில்லிங் தரவுத்தளம் மற்றும் சர்வர் அமைப்பு, உயரழுத்த மின்நுகர்வோரின் பில் விவரங்கள், மீட்டர் ரீடிங் தகவல்கள், ஆன்லைன் கட்டண சேவைகள் மற்றும் செல்போன் பயன்பாடுகளுடன் ஒருங்கி ணைக்கப்பட்ட முக்கியமான வருவாய் சார்ந்தவை கணினி அமைப்பாக செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், உயரழுத்த மின்நுகர்வோருக்கான பில்லிங் சேவை மற்றும் தரவுத்தள அமைப்பை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த சேவையை மேலும் பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும் மாற்றும் நோக்கில், பழைய சர்வரிலிருந்து புதிய மேம்பாட்ட சர்வருக்கு தரவுத்தள மாற்று பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த பணிகள் இன்று (வியாழக்கிழமை)காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே, உயரழுத்த பில்லிங் நுகர்வோர் போர்டல் தற்காலிகமாக செயல்படாது. இதனால் உயரழுத்த மின்நுகர்வோரும், கள அலுவலர்களும் இணையதள சேவைகளை அணுக முடியாது. நுகர்வோர்களுக்கு ஏற்படும் தற்காலிக சிரமத்திற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்ளப் படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.