சென்னை,
தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
அண்ணாநகர், கிண்டி மற்றும் பொன்னேரி கோட்டங்களில் மே 12 ஆம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 11.00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
கோட்டம் : குறை தீர்க்கும் கூட்டம் நடைபெறும் இடம் :-
அண்ணாநகர் கோட்டம்: செயற்பொறியாளர்/இ&ப பொறியாளர் அலுவலகம், எண்.1100, எச்-பிளாக், 5வது தெரு, 11-வது பிரதானசாலை, அண்ணாநகர், சென்னை-600 040.
கிண்டி கோட்டம்: செயற்பொறியாளர் /இ&ப, செயற்பொறியாளர் அலுவலகம், இரண்டாவது தளம், 110கி.வோ கே.கே. நகர் துணைமின்நிலையம் சென்னை-600 078.
பொன்னேரி கோட்டம்: செயற்பொறியாளர்/இ&ப பொன்னேரி அலுவலகம்,33 /11 கி.வோ. துணை மின்நிலையம், டி.எச். ரோடு, வேண்பாக்கம், பொன்னேரி - 601 204.
பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, மின்சார துறை தொடர்பான தங்கள் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என மேற்கு தெற்கு மற்றும் வடக்கு கோட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.