தமிழக செய்திகள்

வெயிலின் தாக்கம்: குளத்தில் உற்சாக குளியல்; தண்ணீரை விட்டு வெளியேற மறுத்து அடம் பிடித்த யானை

குளத்தை விட்டு வெளியே போகச்சொன்னால். தலையை ஆட்டி வெளியேற மறுத்தது.

திருநள்ளாறு,

காரைக்கால் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள் ளது. இக்கோவிலில் பிரக்ருதி எனும் பிரணாம்பிகை என்ற பெயருடைய 22 வயது பெண் யானை உள்ளது. இதனை முருகேசன், மணிகண்டன் ஆகிய 2 பாகன்கள் பராமரித்து வருகின் றனர். தற்போது காரைக்காலில் கோடை வெப்பம் காரணமாக சுட்டெரிக்கும் வெயில் அதிக ரித்து வருகிறது.

வெயிலில் தாக்கத்தைக் தணிப்பதற்காக தீர்த்தக் குளத்தில் கூடுதலாக மதிய வேளையிலும் பிரக்ருதி யானையை குளத்தில் குளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத னால் மகிழ்ச்சி அடைந்துள்ள பிரக்ருதி யானை சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக குளத்தை விட்டு வெளியேறாமல் ஆட்டம் போடுகிறது.

குளத்தை விட்டு வெளியே போகச்சொன்னால். தலையை ஆட்டி வெளியேற மறுத்து. தண்ணீரை கண்ட குழந்தையைபோல் அடம்பிடிக்கிறது. குளத்தில் யானை குளித்து குதூகலமாக இருப்பது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.