தமிழக செய்திகள்

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இம்மானுவேல் சேகரன்: எடப்பாடி பழனிசாமி

தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாளில், அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை,

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர் இம்மானுவேல் சேகரன் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

இமானுவேல் சேகரன் பிறந்தநாள்; எடப்பாடி பழனிசாமி புகழாரம்

சமூக நீதிக்காகவும், சமத்துவத்திற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த தியாகி இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாளில், அவர்தம் புகழைப் போற்றி வணங்குகிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT