சென்னை,
சட்டசபை வளாகத்தில் தே.மு.தி.க. பொது செயலாளர் பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆளும் கட்சிக்கு ஆதரவான உரையாக கவர்னர் உரை இருக்கிறது. தேசிய கீதம் 2 முறை பாடப்பட்டதை வரவேற்போம். அதில் தவறு ஏதும் இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை, பாலியல் வன்கொடுமை, விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றுக்கு இதுவரை தீர்வு இல்லை. கும்மிடிப்பூண்டியில் 3 வயது குழந்தை பாதிக்கப்பட்டுள்ளது.
கடுமையான சட்ட விதிகள் மட்டுமே இந்த பாலியல் வன்கொடுமைகளுக்கு முழுமையான ஒரு தீர்வாக அமையும், இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இதை என்னுடைய கோரிக் கையாக முதல்-அமைச்சரிடம் கூறியுள்ளேன். 3 வயது சிறுமியை சீரழித்தவர்கள் மனிதர்கள் இல்லை. அவர்கள் மிருகங்கள். பாலியல் வன்கொடுமைகளுக்கு என்கவுண்ட்டர் ஒன்றுதான் தீர்வு என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்